1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு..!

1

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்.ஐ.எஸ். ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.

நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like