1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! புற்றுநோய்க்கு மருந்து தயார்: அறிவித்தது ரஷ்யா..!

1

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயாக புற்றுநோய் மாறி உள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கணக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு என உலகளவில் ஆராய்ச்சி நடந்த வண்ணம் உள்ளன. தனியார் நிறுவனங்களும் ஆய்வு செய்து வந்தன.
 

சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் அறிவித்து இருந்தார்.

இதனிடையே பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் பயோலஜிக்கல் ஏஜென்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
 

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா கூறியதாவது: பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவில் கடந்த 3 ஆண்டு மருத்துவ பரிசோதனையில் இருந்தது. தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்.
 

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. நோயின் முக்கியத்துவத்தை பொருத்து, புற்றுநோய் கட்டி விரைவில் அளவு குறைவதுடன் குணமடையும வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கிறது.மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like