குட் நியூஸ்..! 2வது நாளாக சவரனுக்கு ரூ.560 அதிரடி குறைவு..!
கடந்த மாதம் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024 -25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலை சரிந்தது. தொடர்ந்து தங்கம் விலை சரியும் என தெரிவிக்கப்பட்டதால், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் விலை சற்று குறைவதும், உயர்வதுமாகவே இருந்துவருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் , நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது. அதன்படி நேற்று ஒரு சவரன் ரூ.51,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.87.50 க்கு விற்பனை விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 2வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து, ஒரு சவரன் ₹50,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படியே கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,330க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் சரிந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.