1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மாணவர்களுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகை..!

1

பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் ப்ளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டும். மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள் உட்பட விவரங்களை www.tnemis.tn.schools.gov.in இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

DPI

அந்த விவரங்கள வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் நிதியானது விடுவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like