குட் நியூஸ்..! இன்னும் 6 நாட்களில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை..!
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையை திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு குடும்ப தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு இன்னும் ஏழு நாட்களில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வீடு தேடி வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.