1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் மெரினா டூ பெசன்ட் நகருக்கு ரோப் கார்!

1

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் செல்பி பாயிண்ட் வரை 3 கி.மீ. நீளத்திற்கு 'ரோப் கார்' பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரையை பெசன்ட் நகருடன் இணைக்கும் வகையில், 4.6 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் பீச்சை சுற்றிலும் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனச் சொல்லப்படுகிறது.

NHLML எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் 285 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியான போதிலும் அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விரிவான சாத்தியக்கூறு அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன், இத்திட்டத்திற்கு டெண்டர் விடப்படும். இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், வனம் துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இத்திட்டம் மெரினா கடற்கரையிலிருந்து எலியட்ஸ் அதாவது பெசன்ட் நகர் கடற்கரை வரையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமின்றி இப்பகுதியில் டிராஃபிக்கையும் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending News

Latest News

You May Like