குட் நியூஸ்..! இனி அரிசி 25 ரூபாய்க்கு வாங்கலாம் - மத்திய அரசு அதிரடி..!
கடந்த நவம்பரில் தானியங்களின் விலை 10.27 விழுக்காடு கூடியதை அடுத்து, உணவுப் பணவீக்கம் 8.70 விழுக்காடு உயர்ந்தது. அதற்கு முந்திய மாதத்தில் இது 6.61 விழுக்காடாக இருந்தது. இதனால் பயனீட்டாளர்கள் தங்களது மொத்த செலவில் கிட்டத்தட்ட பாதி உணவிற்காகச் செலவிடுகின்றனர்.
இந்நிலையில்,இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடாமல் இருக்கும் நோக்கில், கிலோ 25 ரூபாய் என்ற விலையில் ‘பாரத்’ அரிசியை விற்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவின் தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு (நஃபெட்), தேசிய கூட்டுறவுப் பயனீட்டாளர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்), நடுவண் அங்காடி ஆகியவற்றின் கிளைகளில் ‘பாரத்’ ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கெனவே ‘பாரத்’ என்ற வணிக முத்திரையுடன் கோதுமை மாவையும் பருப்புகளை அரசாங்கம் விற்று வருகிறது.
உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் முடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உணவுப்பொருள்களின் விலை அதிகரித்து வருவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.