1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..! 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் செயல்படுத்தக திட்டம்..!

1

ரேஷன் கடை மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அது போல் பொங்கல் பரிசும் இந்த ரேஷன் கடைகள் மூலமே வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இது போன்று டோர் டெலிவரி திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நிலையில் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் காட்டியது. அதன் படி ரேஷன் பொருட்களை வீடுகளே கொண்டு செல்லும் நடைமுறைக்காக டோக்கன் வழங்கப்பட்டது.

அந்த டோக்கனை வைத்து ரேஷன்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதால் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருளை வழங்கும் திட்டத்தை முதலில் முழங்கியவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். எனவே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்பட்டால் அவருடைய கனவு நனவாகும்

ரேசன் பொருள்கள் டோர் டேலிவரி செய்யப்படும் என்றும்,பொருள்களை டோர் டெலிவரி செய்ய அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்க வேண்டும் என்றும், பாக்கெட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் டோர் டெலிவரி செய்யப்படும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.

மேலும், ரேஷன் பொருள் டோர் டெலிவரிக்காக 6 மில்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Trending News

Latest News

You May Like