குட் நியூஸ்..! 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் இரண்டு சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பொழிவும், பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவியுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதை தவிர புதுவை மற்றும் காரைக்கால், வட தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான நிலையை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.