குட் நியூஸ்..! இனி ரெயில் பயணிகள் ஏ.டி.வி.எம். மூலம் டிக்கெட்கள் வாங்கினால் கேஷ்பேக் கிடைக்கும்..!
ஆர்-வேலட் என்பது முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் ஆர்-வேலட் பயன்படுத்தி யு.டி.எஸ். மொபைல் ஆப் அல்லது தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் மூலம் டிக்கெட் எடுத்தால் 3 சதவீதம் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஆர்-வேலட் ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3 சதவீதம் சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. யு.டி.எஸ். மொபைல் செயலியில் உள்ள ஆர்-வேலட் அல்லது ஏ.டி.வி.எம். மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.