குட் நியூஸ்..! விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு – புதுச்சேரி முதல்வர்..!

புதுச்சேரியில் நேற்று (செப்.5) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கல்வி அமைச்சர் நமசிவாயம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக பணி செய்த 21 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகை திறந்துவைக்கப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக காலை உணவு திட்டத்தில் ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் இந்த திட்டம் மூலம் பால் உடன் சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கட் மற்றும் பழம் வழங்கப்படும்.
அது மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்ததும் அவர்களுக்கு சிறுதானிய உணவு வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை போன்றவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய அப்டேட் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.