1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஏழை பெண்கள் நிலம் வாங்க கூட்டுறவு வங்கியில் கடன்..!

Q

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்குகின்றன.
தற்போது, வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள, நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. இருப்பினும், கிராமங்களில் ஏழை பெண்கள் நிலம் வாங்க உதவும் வகையில், புதிய கடன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஏழை பெண்கள் கடன் பெற்று, 4 - 5 சென்ட் நிலம் வாங்கலாம். அதில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யலாம்.
மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் தொழிலுக்கும் பயன்படுத்தலாம்.
புதிய திட்டத்தில் கடன் பெறும், ஆதிதிராவிட பெண் விவசாயிகளுக்கு மட்டும், 'தாட்கோ' எனப்படும், தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தில் இருந்து, கூடுதலாக மானியத்துடன் கூடிய கடன் கிடைக்க உதவி செய்யப்படும்.
இரண்டு கடன்களையும் சேர்த்து ஒருவருக்கு, 8 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். அனைத்து பிரிவிலும், பெண்களின் ஆர்வத்தை பொறுத்து, கூடுதல் தொகை கடனாக வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like