குட் நியூஸ்..! விரைவில் தி.நகர் அண்ணா நகரில் லைட் மெட்ரோ அமைக்க திட்டம்..!

சென்னை மெட்ரோவுக்கு அதிகளவில் மக்கள் வரவேற்பு அளித்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ரோ பணிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் சென்னையில் லைட் மெட்ரோ அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த டிராமின் நவீன வடிவமே இந்த லைட் மெட்ரோவாகும். இந்த லைட் மெட்ரோவானது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படும்.
இந்த லைட் மெட்ரோவானது மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அண்ணா நகர் மற்றும் திநகர் போன்ற பகுதிகளில் இந்த லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் பல்வேறூ பகுதிகளில் இந்த லைட் மெட்ரோவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை இன்றி சாலையிலேயே செல்லும் வகையில் அமையவுள்ளது இத்திட்டம்; சாலையோரம் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு 30 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ செலவை ஒப்பிடுகையில் மூலதன செலவு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக 2.50 லட்சம் பேரிடம் நேரடியாக கருத்து கேட்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.