குட் நியூஸ்..! இனி 3 நாளில் பி.எப்., அட்வான்ஸ் கிடைக்கும்..!

கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றுக்காக பி.எஃப்., தொகையில் இருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். முன்பு குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.
2020இல் கொரோனா பாதிப்பின் போது தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் தொகையை பெற முடியும். இந்நிலையில், தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பி.எஃப்., தொகையில் அட்வான்ஸ் பெறுவதும் தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது.