குட் நியூஸ்..! இனி ரயில் நிலையங்களில் பயணிகள் யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்த முடியும்..!
இன்று முதல் ரயில் பயணிகளுக்கு சில புதிய வசதிகள் வந்துள்ளன. இந்த புதிய மாற்றம் பணம் செலுத்துவது தொடர்பானது. ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் QR குறியீடு ஸ்கேன் செய்யும் வசதியை ஏப்ரல் மாதம் முதல் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
டிக்கெட் வாங்கும் போது பயணிகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. டிக்கெட் வாங்கும் போது பணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இப்போது பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் வாங்கும் போது QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் விருப்பத்தை பயன்படுத்தலாம். கூகுள் பே மற்றும் போன் பே போன்ற UPI செயலிகள் மூலம் பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப பணம் செலுத்த முடியும்.
இனி ரயில் பயணிகள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த முடியும். இந்த வசதி ஏற்கனவே பல நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நிறைய நேரங்களில் சிலர் டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்து பிடிபடுகின்றனர். இதற்கு அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இனி பயணிகள் ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தலாம்.
ரயில்வே ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் டெர்மினல் இயந்திரத்தின் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அபராதத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.