குட் நியூஸ்..! இனி விமான நிலையத்தில் பயணிகள் பாஸ்போர்ட், ஆதார் அதிகாரிகளிடம் காட்ட தேவையில்லை..!

இந்த டிஜியாத்ரா திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது இது விமான பயண செயல்முறையை காகிதமற்றதாக்குகிறது. அதாவது பயணிகள் விமான நிலையத்தில் நுழைவதில் இருந்து பாதுகாப்பு வழியில் செக்கின் செய்து உள்ளே சென்று விமானத்தில் ஏறும் போதும், பொருட்களை சரி பார்க்கும் போதும் தங்களது பொருட்களை சரி பர்க்கும் வேலையிலும் தங்களது முகத்தையும் காட்டினால் மட்டும் போதும்.
இந்த திட்டத்தில் பயணிகள் பாஸ்போர்ட், ஆதார் அல்லது பிற ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய தேவை இல்லை.சுருக்கமாக சொல்வதென்றால் டிஜியாத்ரா என்பது முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமாகும்.
இந்த திட்டத்தின் மூலம், விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு சோதனை மற்றும் பயணிகளின் அடையாளத்தை சோதித்தல் உள்ளிட்டவற்றின் நேரம் குறையும். ஏற்கனவே, டிஜியாத்ரா, சென்னை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் தர தாமதமானதால், அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை.
பல்வேறு விமான நிலையங்களிலும் கடந்த ஆண்டு முதல் இந்த டிஜியாத்ரா வசதி கொண்டுவரப்பட்டதால், பல லட்சம் விமானப் பயணிகள் அதன் பயனை அடைந்துள்ளனர். ஏற்கனவே 14 விமான நிலையங்களில் இந்த வசதி உள்ளது. அடுத்த மாதம் மேலும் 14 விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு அமைச்சகங்களின் பணியும் இருப்பதால், ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் தனித்தனி ஒப்புதல் பெறுவதால், சென்னை விமான நிலையத்துக்கு இந்த வசதி வரதாமதமாகியிருக்கிறது. ஆனால், அடுத்த மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் விமான பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும். தேர்வு செய்யப்பட்ட விமான நிலையங்களில் 50 சதவீத பயணிகள் இந்த டிஜியாத்ராவை பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.