1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு..!

1

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஏகப்பட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தற்போது வரையிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000லிருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like