குட் நியூஸ்..! தமிழகம் முழுவதும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8f2b14665c1e9abd8475a8034ccff613.webp?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் 33,238 கடைகள் கூட்டுறவுத் துறை மூலமும், மற்ற கடைகள் உணவுத் துறை வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன், சில மளிகைப்பொருட்கள், சோப்பு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
நகர்புறங்களை பொறுத்தவரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரேஷன் கடைகள் இருக்கும். கிராமப்புறங்களில் சில கிமீ தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கும். மலை கிராமங்கள் அல்லது மக்கள் தொகை மிக குறைவாக உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் அந்த பகுதியில் உள்ள பெரிய ஊருக்கு போய் ரேஷனில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்நிலையில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார்.
மேலும் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்காக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9 ஆயிரத்து 182 ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.