1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் சம்பளத்துடன் விடுமுறை..!

1

கர்நாடாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை (ஆண்டு ஒன்றுக்கு) வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க உடல் மற்றும் உணர்ச்சி ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வதால், பெண் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த விடுப்பு நெகிழ்வுத் தன்மை உடையாதாக இருக்கும், இதனால் பெண்கள் தங்களுக்கு நேரம் தேவைப்படும்போது விடுப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு அதன் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும்” என்று அவர் கூறினார்.

இது அமல்படுத்தப்பட்டால், பீகார், கேரளா, ஒடிசாவுக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு ‘மாதவிலக்கு விடுமுறை’ வழங்கும் நான்காவது மாநிலமாக கர்நாடகா உருவாகும். கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

டிசம்பர் 2023ஆம் ஆண்டு முன்னாள் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதே போன்ற திட்டத்தை பாராளுமன்றத்தில் எதிர்த்தார். மாத விலக்கு என்பது ஒரு இயற்கையான செயல் என்றும், சிறப்பு விடுப்பு தேவைப்படும் இயலாமையாக கருதக்கூடாது என்றும், இதனால் பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம் என்றும் எச்சரித்தார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Trending News

Latest News

You May Like