குட் நியூஸ்...! வெங்காயத்தின் ஏற்றுமதி வரி 40% லிருந்து 20% ஆக குறைப்பு..!
விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதி பூண்டுள்ள மோடி அரசு வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40% லிருந்து 20% ஆக குறைத்துள்ளது. ஏற்றுமதி வரி குறைப்பால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரிக்கும். அரசின் இந்த முடிவால், விவசாயிகள் மற்றும் வெங்காயம் சார்ந்த பிற துறைகளும் நேரடி பலன்களைப் பெறும்.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 0% லிருந்து 20% ஆக உயர்த்தியுள்ளது. இறக்குமதி வரியை அதிகரிப்பது சோயாபீன் பயிரின் விலையை அதிகரிக்கும்; சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களை உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்க ஊக்குவிக்கும். இதன் மூலம் விவசாய சகோதர சகோதரிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இந்த முடிவால், சோயா உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் அதிகரிக்கும். சோயா தொடர்பான பிற துறைகளும் பயனடையும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கான அடிப்படை வரியை 32.5% உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கடுகு, சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை பயிர்களின் சுத்திகரிப்பு எண்ணெய்க்கான தேவையை அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு இந்தப் பயிர்களுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், சிறு மற்றும் கிராமப்புறங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிப்பதால், அங்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய முக்கியமான முடிவுகளுகு்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.