குட் நியூஸ்..! இளைஞர்களுக்கு அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம்!
மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், 4.1 கோடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பணியில் சேரும் ஈபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக அரசுத் தரப்பில் ஒரு மாதம் சம்பளமாக ரூ. 15,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..