1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ..!

1

 பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தேவைக்கு ஏற்ப, மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் முக்கிய முடிவை எடுத்துள்ளனர். “மெட்ரோ ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2.50 லட்சமாக இருந்த தினசரி பயணிகள் எண்ணிக்கை தற்போது 2.80 லட்சம் முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், மற்ற நாட்களைவிட பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது, 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க புறநகர் ரயில்சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே முக்கிய முடிவு எடுத்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அக்டோபர் 29, 30 அன்று பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like