குட் நியூஸ்..! இனி ஒரே டிக்கெட்டில் சென்னை முழுவதும் பயணம் செய்யலாம் ..!
தமிழக அரசு மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய அண்ணா செயலி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதற்காக அண்ணா ஆப் என்ற செயலியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் உருவாக்கியுள்ளது.
சென்னையில் பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக்க புதிய அண்ணா ஆப் செயலி செயலி அறிமுகமாக உள்ளது. இந்த செயலி மூலம் டிக்கெட் எடுப்பதுடன், எந்த வழித்தடத்தில், எந்தப் போக்குவரத்தில் விரைவாக செல்லலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளது தற்பொழுது அண்ணா செயலியின் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அண்ணா ஆப் செயலியின் மூலம் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி பொது போக்குவரத்து களில் பொதுமக்கள் எளிமையாக பயணம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, பயணிகள் செல்ல வேண்டிய இடம் மற்றும் பேருந்து புறப்படும் இடம் உள்ளிட்ட தகவல்களை அதில் உள்ளிட வேண்டும்.
மேலும் அண்ணா ஆப் செயலியில் பயணிகள் எத்தனை முறை பயணம் செய்ய உள்ளீர்களோ அதற்கான பயணமுறையை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக அண்ணா ஆபில் மொத்த கட்டணம் காட்டப்படும் அதற்கான தொகையை யூ பி ஐ பேமெண்ட் அல்லது ஜி பே மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம். பின்னர் உங்களுக்கான கியூ ஆர் கோடு பொருத்தப்பட்ட பயணச்சீட்டு வாட்ஸ் அப் பில் வந்துவிடும். இதன் மூலம் எளிமையாக செல்லலாம்.
புதிய செயலி பயணிகளுக்கு பல வசதிகளைத் தரும். "டிக்கெட் பெறுவது மட்டுமல்லாமல், எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும்.எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ANNA APP" எப்படி செயல்படும்?
இந்த புதிய செயலியின் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்து, சோதனை ஓட்டத்தில் உள்ளது. இந்த மாத இறுதியில் செயலியை அறிமுகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். "ANNA APP" மூலம், பயணிகள் மிக எளிதாக டிக்கெட்டுகளைப் பெறலாம்:
பயணத் திட்டமிடல்: நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் புறப்படும் இடம் போன்ற தகவல்களைச் செயலியில் உள்ளிட வேண்டும்.
பயண முறை தேர்வு: நீங்கள் எத்தனை போக்குவரத்து முறைகளைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடலாம்.
கட்டணக் காட்சி: உங்கள் பயணத்திற்கான மொத்த கட்டணம் திரையில் காண்பிக்கப்படும்.
QR குறியீடு டிக்கெட்: UPI பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்தியதும், உங்கள் மொபைலில் QR குறியீடு பொறிக்கப்பட்ட தனிப்பயணச் சீட்டைப் பெறலாம். இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்துப் பொதுப் போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.