குட் நியூஸ்..! இனி விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்..!
கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரையின் போது, இருமுடி எடுத்துச் செல்வது ஐதீகம்.
இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், எக்ஸ்-ரே, இடிடி (வெடிகுண்டு சோதனை கருவி),உடல் பரிசோதனை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பிறகே பக்தர்கள் தங்களது இருமுடியை விமானங்களில் உடன் கொண்டு செல்ல முடியும் என்கின்றனர்