1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரயில் பயணத்திலும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யலாம்..!

1

ஸ்விக்கி மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவினை தேர்வு செய்து வாங்கி உண்ண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IRCTC நிறுவனத்துடன் ரயிலில் உணவு வழங்க ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக Swiggy நிறுவனமானது பெங்களூரு, புவனேஸ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி வழங்க உள்ளது . வரக்கூடிய வாரங்களில் இந்த சேவை இந்தியா முழுவதும் உள்ள 59 கூடுதல் நகர ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ரயில் பயணத்தின்பொழுது நாம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவ்வாறு நாம் பயணிக்கும்பொழுது அங்கு இருக்கக்கூடிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதன் மூலமாக இந்தியாவின் சமையல் சார்ந்த பன்முகத்தன்மையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கிறது. இது அவர்களது பயணத்தை இன்னும் சௌகரியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்,” என்று ஸ்விக்கி நிறுவனத்தின் ஃபுட் மார்க்கெட் பிளேஸ் CEO ரோஹித் கபூர் கூறினார்.

ஸ்விக்கி மூலமாக முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவு சேவைகளை பெறுவதற்கு பயணிகள் IRCTC அப்ளிகேஷனில் PNR ஐ என்டர் செய்ய வேண்டும். எந்த ரயில் நிலையத்தில் உணவு டெலிவரி வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்த பிறகு, அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்டுகளின் பட்டியல்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, அதில் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட லொகேஷன் மற்றும் நேரத்தில் உணவை வழங்கும் ரெஸ்டாரண்டில் பயணிகள் உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பயணிகளுக்கு டெலிவரி செய்யப்படும் உணவுகள் வெதுவெதுப்பாகவும், ஃபிரஷ் ஆகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு அவை ஸ்விக்கி பைகளில் இன்சுலேட்டட் முறையில் பேக்கிங் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பதையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like