1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ஒரே செயலியில் டிக்கெட் புக்கிங் + பஸ் டிராக்கிங்..!

1

சென்னையை பொறுத்தவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் பல லட்சகக்ணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது.

 

சென்னை மாநகர பேருந்துகள் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பயணிகளே அறிந்து கொள்ளும் வகையில், சென்னை பஸ் ஆப் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் பஸ்கள் எந்த இடத்தில் வருகிறது? பயணிகள் நிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த செயலியில் டிராக்கிங் சிஸ்டம் துல்லியமாக இல்லை எனவும் பல வழித்தடங்களில் வரும் பஸ்கள் முறையாக செயலியில் காட்டப்படுவது இல்லை என்பது பயணிகள் பலரும் கூறும் கருத்தாக உள்ளது.

 

இந்த நிலையில் தான் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விரைவில் டிக்கெட் புக்கிங் மற்றும் பஸ் டிராக்கிங் என இரண்டும் ஒரே செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சென்னை பஸ் செயலியில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு வரப்படும் என்றும், பயணிகள் இந்த செயலியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பஸ்சில் ஏறியதும் நடத்துநர்கள் டிக்கெட்டை தன்னிடம் உள்ள கருவியைக் கொண்டு உறுதி செய்து கொள்ளும் வகையில் இந்த சிஸ்டம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

 

Trending News

Latest News

You May Like