1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைனில் செய்யலாம்..!

1

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.

பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும். https://www.tnpds.gov.in/home.xhtml

வலது புறத்தில் "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் பின்னர் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தேர்வு செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.

1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். முகவரிகளை மாற்ற அதிக நேரம் எடுக்காது. வழக்கமாக முகவரியைப் புதுப்பிக்க 15 முதல் 30 நாட்கள் ஆகும்.

இது போக தமிழ்நாடு அரசு சார்பாக TNePDS அலைபேசி செயலி என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் TNePDS என்ற அலைபேசி செயலி மூலம் புகார் பதிவு செய்தல், பரிவர்த்தனைகள், ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம், நியாயவிலைக் கடையில் பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் பின்னூட்டம் (Feedback) ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

Trending News

Latest News

You May Like