1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத தள்ளுபடியில் பயணிக்கலாம்... எப்படி தெரியுமா ?

1

CMRL பயணிகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும், ஓரளவுக்கு குறைந்த விலையிலும் பொது போக்குவரத்தில் பயணிப்பதற்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுக்கும் செயல்முறையையும் CMRL பல விதங்களில் எளிதாக்கி உள்ளது. கவுண்டரில் டிக்கெட் எடுப்பதை காட்டிலும் CMRL மற்றும் Phonepe செயலிகள் மூலம் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி கிடைக்கும். இதனால் நீங்கள் கூட்டத்தில் நின்று டிக்கெட் எடுக்கவும் தேவையில்லை. 

இந்நிலையில், ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) என்ற நிறுவனம், ஊபர் செயலியின் (Uber App) மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகவலை ஊபர் இன்று (ஆக. 7) அறிவித்துள்ளது.  (Image Source: CMRL, Uber)  

இன்று முதல், சென்னையில் உள்ள ஊபர் பயனர்கள் தங்கள் மெட்ரோ பயணங்களைத் திட்டமிடலாம். ஊபர் செயலியின் மூலம் QR Code அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்கலாம், அதுமட்டுமின்றி நிகழ்நேர போக்குவரத்துத் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.இதற்கான வசதிகளை ஊபர் செயலி அறிவித்துள்ளது. இந்த செயல்பாடு ONDC இன் இயங்கக்கூடிய நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதோடு, சென்னையில் உள்ள பயணிகள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊபர் செயலிகளில் மெட்ரோ டிக்கெட்டுகளை எடுத்தால் 50% தள்ளுபடியைப் பெற முடியும். அதுமட்டுமின்றி, இணைக்கப்பட்ட பயணத்தை எளிதாக்குவதற்காக, சென்னையில் உள்ள மெட்ரோ நிலையங்களில் இருந்து தொடங்கும் அல்லது முடிக்கும் சவாரிகளுக்கு ஊபர் ஆட்டோ மற்றும் ஊபர் மோட்டோ இரண்டிலும் ரூ.20 வரை 50% தள்ளுபடியை ஊபர் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும் செல்லுபடியாகும்.  

Trending News

Latest News

You May Like