1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம்..!

1

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்க பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் சில அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம் 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால் ஒன்று அல்லது 2 பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

மற்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின் தங்கி இருக்கின்றன. அதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இனி 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என தொடக்க கல்வி இயக்குனராகத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இனி வரும் கல்வியாண்டில் பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு புதிய ஆசிரியர்களை நியமிக்க தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like