குட் நியூஸ்..! இனி இவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்..!
கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளத்தாக தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
யாருக்கெல்லாம் வழங்கப்படும்; அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.
2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படலாம்.
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.