1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.!

1

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மானிய விலையிலும், இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிது. மாநிலத்திற்கு மாநிலம் வழங்கப்படும் உணவு பொருட்களிலும் வேறுபாடு உள்ளது. மேலும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலைக்காகவும் இடம்பெயர்ந்து செல்பவர்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இந்தத் திட்டம் உள்ளது. .

இந்தத் திட்டத்தின் மூலம் எந்த ஊரில் இருந்தாலும், எந்த மாநிலத்திலும் உணவு பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன.

அவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் மலை கிராமங்களில் உள்ள பகுதிகளிலும், குறைவான மக்களுள்ள இடங்களிலும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் நடமாடும் நியாயவிலைக்கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கு பதிலாக வீடுகளுக்குச் சென்றே வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் டெல்லியில் “கர்-கர் ரேஷன் யோஜனா” என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரேஷன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெல்லியில் உள்ள 72 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like