1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அரசு பஸ்களில் இனி இது இலவசம்..!

Q

மாநகர பேருந்துகளுக்கான லக்கேஜ் விதிமுறையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 'டிராலி' வகை சூட்கேஸ்கள் 65 செ.மீ., அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகளுக்குகட்டணமில்லை.
அதற்கு மேல் உள்ள டிராலி வகை சூட்கேஸ் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமை, 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லும் சுமைகளுக்கு, ஒரு பயணிக்கான டிக்கெட் வசூலிக்க வேண்டும் என, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/ பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், Laptops, சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லதக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் (Wheel Chair), கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச்செல்ல கூடிய சுமைகளாகும்.
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் भीळ 65cm (Medium Size) அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
பயணிகள் எடுத்துவரும் 65cm (Large size) அளவிற்கு மேல் உள்ள டிரா வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்ட வசூலிக்கப்பட வேண்டும்.
பயணிகள் எடுத்துவரும் 65cm (Large size) அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைக்களுக்கு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைககளை அனுமதிக்கக் கூடாது.

Trending News

Latest News

You May Like