குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது!

“தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஏமன், ஓமன் கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் 25- ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கும், அக்டோபர் 26- ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைத் திரும்ப வேண்டும்.” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.