குட் நியூஸ்..! 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது..!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்குவதால் இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.