குட் நியூஸ்..! இனி ஆதார் எண் மற்றும் நகலை அளிக்க தேவையில்லை..!

ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியில் கணக்கு துவங்குவாதற்கும், அரசாங்க சலுகைகளை பெறுவதற்கு, சிம் கார்டு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் தேவை. இந்நிலையில் ஒன்றிய அரசு ஆதார் சேவைகளுக்காக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஆதார் கார்டு நகலை சமர்பிக்க வேண்டிய இடங்களில், இனிமேல் நம் முகத்தை காட்டினால் போதும். இந்த வசதியால் ஆதார் எண் மற்றும் நகலை அளிக்க தேவையில்லை. இந்த புதிய வசதி சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இந்த புதிய செயல்முறையை கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை போல் பயன்படுத்தலாம்.
அதாவது ஆதார் செயலியில் க்யூஆர் கோட் கொண்டு வரப்பட உள்ளது. இதனை ஓபன் செய்து கேமராவில் நம் முகமும் ஸ்கேன் செய்தால், ஆதார் விவரங்கள் காட்டப்படும். இதன் மூலம் பயனாளரின் முகமும், ஆதார் விவரம் உறுதி செய்யப்படும். ஆதார் நகல் மற்றும் எண் தேவைப்படும் இடங்களில் இந்த புதிய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
பழைய முறைப்படி ஆதார் விவரம் கேட்கப்படும் ஓட்டல், பயணம் உள்ளிட்ட இடங்களில் அதன் நகல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக இனிமேல் பயனாளரின் முகத்தை காட்டினால் போதும். ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்படும். விரைவில் நாடு முழுவதும் இந்த வசதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் ஆதார் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஆதாரில் உள்ள தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் உள்ள உள்ள அனைத்து தகவல்களும் சரியானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் ஜுன் 14 ஆம் தேதி வரை ஆதாரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.