குட் நியூஸ்..! இனி டாக்ஸிகளுக்கு அதிக கட்டணம் செலுத்த தேவையில்லை..!
தனியார் டாக்ஸி செயலிகளான உபேர், ஓலா, ராபிடோ பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில் (TATO) என்ற செயலி தனியாரால் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம் மக்களுக்கு முறையான கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது