1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் காத்திருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்..!

1

திருப்பதி தேவஸ்தானம் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ளே நுழைந்தவுடன் டைம் ஸ்லாட் டோக்கன்களை பெற்றுக்கொண்டு வெளியே வந்துவிடலாம்.

அப்படி வெளியே வரும் பக்தர்கள் தங்களின் தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வரலாம் என்ற நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த இடைப்பட்ட நேரத்தை பயன் உள்ளதாக்கும் வகையில், திருமலையில் ஆன்மீக பயணத்துடன், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து படகு சவாரியை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன்படி பாபவிநாசம் அணையில் படகுகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காத்திருப்பு நேரம் வீணாகமால் படகு சவாரி மூலம் ஒரு புதிய அனுபவத்தை பெறலாம். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 3 படகுகள் மூலம் பாபவிநாசம் அணையில் இயக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து எத்தனை படகுகளை இயக்க வேண்டும், ஒவ்வொரு படகிலும் எத்தனை பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படகு சவாரி திட்டத்தை வனத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான பவன் கல்யாண் தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like