குட் நியூஸ்..! இந்த பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!
கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.