1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! புதிய குடும்ப அட்டைகள் பொங்கலுக்குள் வழங்கப்படும் : அமைச்சர் சக்கரபாணி..!

1

உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்ததாவது, மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன்  கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like