1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க புதிய திட்டம்..!

1

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களின் வசதிக்காக ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்கும் விதமாக புதிய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து உயிரிழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக அரசின் சார்பில் ஏகப்பட்ட அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய படியே பயணம் செய்து வருகின்றனர். இதனை தடுக்கும், விதமாக அனைத்து அரசு சாதாரண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் முதற்கட்டமாக 42 சாதாரண பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like