1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! அரிசி விலையை குறைக்க புது முயற்சி... ஒரு கிலோ வெறும் 29 மட்டுமே..!

1

இந்தியாவில் கடந்த ஆண்டு அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்தது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த விலை, தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அரிசியை விலை ஏற்றி வாங்கும் போது சாமானியர்கள் ஷாக் ஆகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட அரிசி விலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால், உணவு பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை சரி செய்ய பொது நுகர்வோருக்கு “பாரத் அரிசி” என்றபெயரில் மலிவு விலையில் அரிசியை விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான சில்லறை விற்பனையை தொடங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ஒட்டுமொத்த உணவு பணவீக்கத்தை சமாளிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு ‘பாரத் ரைஸ்’ முயற்சியை தொடங்கி இருக்கிறது.பாரத் அரிசி நாடு முழுவதும் விற்பனைக்கு வருகிறது. சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில்லறை விலையில் கிலோ ரூ. 29க்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது வேன்கள் மற்றும் மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் பிசிக்கல் அவுட்லெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் அனைத்து இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் போர்ட்டல் https://evegoils.nic.in/rice/login.html என்பதில் இந்த அரிசி விலை ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் அரிசி மையங்களில் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு வழங்கப்படும். தற்போது பாரத் பிராண்டு கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், நிலக்கடலை கிலோ ரூ.60க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாரத் ஆட்டா, பாரத் தால் போல பாரத் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த உயர்ரக பாரத் அரிசியை கறுப்பு சந்தைக்கு கொண்டு சென்றாலோ, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like