1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய செயலி அறிமுகம்..!

1

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி ஆனது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மை சேஃப்டி பின் என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மை சேஃப்டி பின் செயலி தற்போது சென்னை மாநகராட்சி உடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த செயலியின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பகுதி குறித்த பாதுகாப்பு மற்றும் தெருவிளக்கு போன்ற பாதுகாப்பற்ற காரணங்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும் மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பில் பெண்களின் பாதுகாப்புக்கு உதவி எண்கள் உள்ளதாகவும, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியின் வாயிலாக பாதுகாப்பான பகுதி குறித்த தகவலை பெண்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like