1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா : பூமியை விட 2 மடங்கு பெரியதாம்..!

1

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இதனை நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும்போது இது பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

Trending News

Latest News

You May Like