குட் நியூஸ்..! இன்று முதல் தூர்வாரும் பணி தொடக்கம் – மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் இன்னும் பருவமழை காலம் துவங்காத நிலையிலேயே ஜூலை மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக நாளை முதல் கழிவு நீர் குழாய்களில் தூர் வாரும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகரில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பதலை தடுப்பதற்காக இன்று முதல் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 720 தெருக்களில் 300 தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு 5277 இயந்திர நுழைவு வாயில்களில் தூர்வாரும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.