1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்..!

1

மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வசூல் செய்து வருகிறது. அதன்படி பயனர்கள் தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு ஏற்ப கட்டணங்களை நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ செலுத்தி வருகின்றனர். 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் புயல் காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

மின்சார வாரியமும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் புயல் பாதித்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்துவதில் தமிழக அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 3 நாட்களில் அபாரதத்துடன் மின்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அடுத்த மாதம் கணக்கெடுப்பில் ஈடுகட்டப்படும் என்றுள்ளனர். மிக்ஜாம் புயல் மின் நுகர்வோரின் இடர்பாடுகளை கருதி முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like