குட் நியூஸ்..! தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருப்பதால் துணி கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் சென்னையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு நவம்பர் 9 ஆம் தேதி 250, நவ 10ல் 750 பேருந்துகளும், நவ. 11ல் 520 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும் திருச்சியில் இருந்து மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூரில் இருந்து முக்கிய இடங்களுக்கும், நவ 9ல் 100 பேருந்துகளும், நவ 10, 11ல் 250 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. அதே போல தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 12, 13, 14 ஆம் தேதிகளில் மீண்டும் திரும்பி செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்துகளில் www.tnstc.in இணையதள ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும், அதற்கு தகுந்தாற்போல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.