குட் நியூஸ்..! விரைவில் மாதாந்திர மின் கட்டணம், நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில்பாலாஜி..!
தமிழ்நாட்டில் தற்போது வீடுகளில் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக வீடுகளுக்கு சென்று மீட்டரில் பதிவாகி இருக்கும் மின் பயன்பாட்டை கணக்கெடுத்து மின்சார கட்டணத்தை அறிவிக்கின்றனர்.
ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்திவிட்டால் ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுக்க வேண்டியதில்லை, அதே போல மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர
மின் கட்டணம், நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.