1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் மொபைல் போன் விலை குறைகிறது..!

1

 பட்ஜெட்டிற்கு முன்பு என்னென்ன பொருட்கள் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு ஒருநாளுக்கு முன் இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையில் கணிசமான விலை குறைப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் மத்தியில் தற்பொழுது அதிகம் உள்ளது. ஏனெனில் சென்ற ஆண்டு ரியல் எஸ்டேட் துறை கிடுகிடுவென வளர்ந்து விலைகள் விண்ணை முட்டின. அதனால் அரசு மத்திய பட்ஜெட்டில் ரியல் துறை சார்ந்து நல்ல செய்தியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டு பட்ஜெட்டிற்குப்பிறகு தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள், பிளாட்டினம் பொருட்கள், தங்கக் கட்டிகள், போலி நகைகள், சிகரெட், சமையலறை மின்சார புகைபோக்கி, கூட்டு ரப்பர், காப்பர் ஸ்கிராப் விலைகள் மிக அதிகாம உயர்ந்தது. ஆனால் லித்தியம் பேட்டரிகள், மின்சார வாகனங்கள், ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள், பொம்மைகள், மிதிவண்டிகள், புகைபோக்கி வெப்ப சுருள் போன்ற பொருட்கள் விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆப்பிள் உள்ளிட்ட உலகின் பல முன்னணி செல்போன்கள் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. அவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் ஸ்க்ரூக்கள், சிம் சாக்கெட் போன்ற உதிரி பாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்திருக்கிறது மத்திய அரசு.இதனால் செல் போன்களின் விலை குறையும்.

1

Trending News

Latest News

You May Like