1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விடுபட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

1

'ஆணுக்கிங்கே பெண் நிகர்' என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுரை 1.9 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், விடுபட்ட பயனாளிகள், இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.இதில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவிகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த பி.புதுப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு , பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் கூறினார்.

முன்னதாக புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும், முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களுக்கும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், . அவர்களுக்கும் இந்த முறை பணம் வழங்க திட்டமிடப்பட்டது. இதேபோன்று முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது.இந்த நிலையில் தான் மொத்தம் 1.48 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் வரும் 15 ஆம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர்களது போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like