குட் நியூஸ்..! விரைவில் வெற்றிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாகப் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இனி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாணவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என்பதற்காக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் தொடரும். இனி வரும் காலங்களில் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.
வெற்றி பள்ளிகள் திட்டம் என்பது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாடல் பள்ளிகள் இருக்கிறது. இதனை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒரு யூனியனுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 500 யூனியனில் உள்ள பள்ளிகளை வெற்றிப் பள்ளிகள் திட்டத்திற்குள் கொண்டு வரப் போகிறோம். ஆசிரியர்கள் புதிய சிந்தனைகளுடன் பாடங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
.png)